அமரர் முத்துக்குமாரு பேரம்பலம்

பிறப்பு06 JUL 1944, இறப்பு19 JUN 2022

வயது 77

நெடுந்தீவு மேற்கு, Sri Lanka (பிறந்த இடம்) மல்லாவி, Sri Lanka Bobigny, France

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, இல. 352, மல்லாவி 4ம் யுனிற் திருநகர் யோகபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு பேரம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அழகான வார்த்தை அப்பா
ஆயிரம் தடவை சொன்னாலும்
அழகான வார்த்தையிது
இதயத்தின் ஆழத்தில்
உதித்து உதிரத்தை
உறைய வைக்கும் வார்த்தையிது

நெஞ்சமதில் நிலைத்து நின்று
எண்ணமதில் என்றும் நிலைத்து
வண்ண மலர் வாசமென
எம் மனங்களிலே வீசிநின்றீர்

கண்ணிமைக்கும் காலத்துள்
காலனுமைக் கவர்ந்து சென்ற
கொடுமையெண்ணிக் கலங்குகின்றோம்
மனம் வெதும்பி வாடுகின்றோம்.

உம் இழப்பினை ஏற்றுக் கொள்ள முடியாமல்
கண்ணீரில் தத்தளிக்கின்றன
எங்கள் விழிகள்!!

ஒன்று, இரண்டு அல்ல
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
எம் இறுதி மூச்சு நிற்கும் வரைக்கும்
உம்மை நாம் மறவோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

கடந்த 19-06-2022 அன்று இறைபதம் எய்திய எங்கள் குடும்பத்தலைவர் உயர்திரு முத்துக்குமாரு பேரம்பலம் அவர்களின் முதலாம் ஆண்டு திவசக்கிரியைகள் எதிர்வரும் 08-07-2023 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெற இருக்கும் விருந்துபசாரத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
34, Rue Marcel Broucxau,
93000 Bobigny,
France

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles