படல்கும்புரயில் பழக்கடை உரிமையாளர் கொலை; வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

Colombo (News 1st) மொனராகலை – படல்கும்புர வீதியின் 11 ஆம் கட்டை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றின் உரிமையாளரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.

படல்கும்புர பகுதியை சேர்ந்த 45 வயதானவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படல்கும்புர பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles