குளவி கொட்டுக்கு இலக்காகி 5 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

Colombo (News 1st) லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரகலை நடுக்கணக்கு தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

5 பிள்ளைகளின் தாயான 80 வயதான பெண்ணொருவரே இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(17) காலை லிந்துலை – பம்பரகலை நடுக்கணக்கு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே குறித்த பெண் குளவிக் கொட்டுக்கு இலக்காகியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

குளவிக் கொட்டுக்கு இலக்கான பெண் பிரதேச மக்களால் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான குளவிக் கொட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில் இடம்பெறுவதாகவும் இது தொடர்பில் தமக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles