இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

Colombo (News 1st) இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல் சூளையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று (17) மாலை 6 மணியளவில் சுகவீனமுற்றுள்ளார்.

வயிற்று வலி காரணமாக  சந்தேகநபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இசுருபுர – இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Previous article
Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles