காணாமற்போயிருந்த பெண்ணும் அவரது குழந்தையும் காட்டில் இருந்து சடலங்களாக மீட்பு; உறவினர் கைது

Colombo (News 1st) ஹொரணை – அங்குருவாதொட்ட, ஊரதுடாவ பகுதியில் காணாமற்போயிருந்த பெண்ணும் அவரது பெண் குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது வீட்டை அண்மித்த காட்டுப்பகுதியில் இருந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் கடந்த 18 ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.

தான் பணி முடிந்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில் மனைவியும் குழந்தையும் வீட்டில் இல்லை என கணவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த இருவரினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் அளவிலான தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

24 வயதான பெண்ணும் பிறந்து 11 மாதங்களேயான அவரது பெண் குழந்தையுமே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.

Previous article
Colombo (News 1st) சீனாவின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles