Colombo (News 1st) உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, பல்வேறு விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள புதிய இறப்புச் சான்றிதழ்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, நீதி அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த இறப்புச் சான்றிதழை தயாரித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்தார். 12 பிரதான விடயங்கள், 24 உப விடயங்களை உள்ளடக்கியதாக இந்த இறப்புச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம், இயற்கை மரணமா இல்லையா என்பனவே இதுவரை வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது, உயிரிழந்த நபர் தொடர்பிலும் மரணத்திற்கான காரணம் தொடர்பிலும் சான்றிதழில் குறிப்பிட வேண்டும் என்பதுடன், மரண விசாரணை அதிகாரிகளால் இறப்புச் சான்றிதழ்களில் பதிவிடப்படவும் வேண்டும். மரணத்திற்கான காரணத்தை நான்கு விடயங்களின் கீழ் விரிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும் அகில இலங்கை மரண விசாரணை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத் தெரிவித்தார். உயிரிழப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இருந்து இடம்பெறும் அனைத்து மரணப் பரிசோதனைகளையும் புதிய இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிட வேண்டும்.

Colombo (News 1st) வறண்ட காலநிலை காரணமாக சில பிரதேசங்களுக்கு சிறுபோகத்திற்கான நீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறை பருவப்பெயர்ச்சியின் போது எதிர்பார்க்கப்பட்ட மழை வீழ்ச்சியை விட 70 வீதம் குறைந்த அளவிலேயே மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்தார்.

இதன் காரணமாக நாச்சாதுவ மற்றும் உடவலவ ஆகிய பகுதிகளின் வயல் நிலங்களுக்கு நீர் வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மகாவலி திட்டத்தின் நீரேந்து பகுதிகளில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நீரின் அளவு 46 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலவ வலயத்தின் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நீரின் அளவு 12 வீதமாகக் காணப்படுகிறது.

நீர்த்தேக்கங்களின் கொள்ளளவும் 38% வரை குறைவடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

இதனிடையே, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதுமான அளவு மழைவீழ்ச்சி நாட்டிற்கு கிடைக்கப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாரத்ன குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles