அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது

Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளையில் வைத்து இன்று (27) மாலை அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2020 பெப்ரவரி 27 ஆம் திகதி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்பாக இடம்பெற்ற சட்டவிரோத கூட்டத்தில் பங்கேற்றமை, தீங்கு விளைவித்தமை, நீதிமன்ற உத்தரவை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இந்திக்க விதான பத்திரன எனும் உறுப்பினரே வசந்த முதலிகேவுடன் கைது செய்யப்பட்ட மற்றைய நபராவார்.

Previous article
Next article
Colombo (News 1st) நாட்டின் முன்னணி வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 92 கணக்குகளில் குறித்த பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக வங்கியின் தலைவர் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கிணங்க, சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிணை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ள 92 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles