முன்னணி வங்கியில் 383.4 மில்லியன் ரூபா மோசடி; வங்கி ஊழியருக்கு விளக்கமறியல்

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 166 ஓட்டங்களையே பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி,  05 விக்கெட் இழப்பிற்கு 576 ஓட்டங்கள் இருக்கையில் தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 41 ஓட்டங்களை குவித்தார்.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் அதிகபட்சமாக 63 ஓட்டங்களை பெற்றார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் நோமன் அலி 70 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை கைப்பற்றினார்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 188 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்ட அதிசிறந்த வெற்றி இதுவாகும்.

Previous article
Colombo (News 1st) நாட்டின் முன்னணி வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவர் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் 92 கணக்குகளில் குறித்த பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக வங்கியின் தலைவர் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கிணங்க, சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பிணை வழங்குமாறு பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணியின் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார். குறித்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ள 92 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.
Next article

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles