Sangathy
News

ஒக்டோபர் வரை போதிய மழைவீழ்ச்சி கிடைக்காது – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு – வளிமண்டலவியல் திணைக்களம்

Colombo (News 1st) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பருவப் பெயர்ச்சியின் போதும் போதியளவு மழை பெய்யவில்லையென திணைக்களத்தின் பணிப்பாளர் ஷிரோமனீ ஜயவர்தன கூறினார்.

இதனிடையே, நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீரேந்துப் பகுதிகளின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 33.3 வீதம் வரை குறைடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் சுதர்ஷனீ விதானபதிரண தெரிவித்துள்ளார்.

மகாவலி ஆற்றின் கொள்ளளவு 34 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகாவலி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மொத்த மின் உற்பத்தியில் நீர் மின் உற்பத்தியின் பங்கு 16 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், நாளாந்த மொத்த மின் உற்பத்தியின் 64 வீதம், நிலக்கரி மற்றும் எரிபொருள் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

நாளாந்தம் சூரிய சக்தியின் மூலம் 5 வீதமும் காற்றாலைகளின் மூலம் 6 வீதமும் தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்படுகின்றது.

இந்தநிலையில், நாட்டின் மின்சாரத்திற்கான கேள்வி மணித்தியாலத்திற்கு 48 கிகாவாட்(GW) வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

முட்டை கப்பல் நாட்டை வந்தடைந்தது

Lincoln

Poland missile attack: US President says ‘unlikely’ that missile fired from Russia

Lincoln

Hirunika warns of next wave of protests

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy