சிரேஷ்ட ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் விபத்தில் உயிரிழப்பு

Colombo (News 1st) சிரேஷ்ட ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75 ஆவது வயதில் காலமானார்.

லண்டனில் இடம்பெற்ற விபத்தில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தனது வீட்டில் இருந்து நேற்று (01) நடை பயிற்சிக்காக சென்றபோது,  அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றி சர்வதேச ரீதியில் புகழ்பெற்றிருந்த விமல் சொக்கநாதன் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து திரைப்படமான ‘நான் உங்கள் தோழன்’ என்ற திரைப்படத்திலும் நடித்ததுடன், வானொலிக் கலை, விமலின் பக்கங்கள் போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அவர், தான் எழுதிய ‘லண்டனிலிருந்து விமல்’ என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார்.

அமரர் விமல் சொக்கநாதனின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles