Sangathy
News

உலகின் மிக வயதான மனிதர் தனது 127 ஆவது வயதில் காலமானார்

பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் José Paulino Gomes வயது மூப்பு காரணமாக தனது 127 ஆவது வயதில் காலமானார்.

இவ்வாரம் 128 ஆவது வயதில் அடிவைக்க இருந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

José Paulino Gomes-இன் உடல் உறுப்புகள் செயலிழந்ததால் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மினாஸ் ஜெரைஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் கோம்ஸ் இறந்துள்ளார்.

இதையடுத்து, அவரது உடல் கடந்த சனிக்கிழமை   Pedra Bonita-வில் உள்ள Corrego dos Fialhos கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

கோம்ஸின் திருமணச் சான்றிதழின்படி 1917 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி அவர் பிறந்தார்.

உலகப் போர்கள் மற்றும் மூன்று பெருந்தொற்று நோய்களிலிருந்து தப்பியவர். கோம்ஸூக்கு ஏழு குழந்தைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

Gomes நூற்றாண்டைக் கடந்தவர் என்று கொண்டாடப்பட்டாலும் ‘உலகின் மிக வயதான மனிதர்’ எனும் உரிமை கோரல்களில் மாறுபட்ட பதிவுகள் (records) உள்ளன.

115 வயதான ஸ்பெயினின் Maria Branyas Morera தான் தற்போது அந்த கின்னஸ் சாதனையை படைத்தவராக உள்ளார்.

இதற்கு முன்பு, பிரான்ஸ் நாட்டுப் பெண் Jeanne Calment, 1997 இல் 122 வயதில் காலமானார். அவர் அதிக நாட்கள் வாழ்ந்த மிக வயதான நபர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார்.

Related posts

Self-proclaimed Bodhisathva remanded

John David

ரஷ்யா முன்வைத்த இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த பிரேரணை நிராகரிப்பு

John David

Bolivia’s interim president Anez says she has coronavirus

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy