வெள்ளவத்தை – ஃப்ரெட்ரிக்கா வீதியிலுள்ள மாடிக்குடியிருப்பிலிருந்து வீழ்ந்து இளைஞர் பலி

Colombo (News 1st) வெள்ளவத்தை – ஃப்ரெட்ரிக்கா வீதியிலுள்ள மாடிக்குடியிருப்பு ஒன்றிலிருந்து 24 வயதான இளைஞர் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாடிக் குடியிருப்பின் 8 ஆவது மாடியிலிருந்து வீழ்ந்த இளைஞர் காயங்களுக்குள்ளானார்.

இதனையடுத்து, களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles