Sangathy
News

கடன் சவால்களை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவுவதாக சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

Colombo (News 1st) நிதி கடன் சவால்களை திறம்பட எதிர்கொள்ள இலங்கைக்கு சீனா உதவும் என சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தென் மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரில் ஏழாவது சீன-தெற்காசிய கண்காட்சியின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீனா எப்போதுமே இலங்கையின் நம்பகமான மூலோபாய பங்காளியாக உள்ளதுடன், இலங்கை எப்போதும் சீனாவுடன் நட்புறவுடன் செயற்படும் என சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அடிப்படை தேவைகள் தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை, சீனாவுடன் இணைந்திருப்பதை அமைச்சர் Wang Yi பாராட்டியுள்ளார்.

வறுமை மற்றும் வளர்ச்சியற்ற நிலையில் இருந்து இலங்கையை விடுவித்து அதன் தொழில்மயமாக்கல் செயன்முறை மற்றும் விவசாய நவீனமயமாக்கலை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தன 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15 ஆம் திகதி சீனாவிற்கு சென்றுள்ளார்.

Related posts

CIPM Sri Lanka and Wayamba Uni MoU to advance knowledge and practice in HR

Lincoln

Ponnambalam raises breach of privilege over his arrest

Lincoln

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுவிட்சர்லாந்து பயணம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy