அமரர் பிரபாகரன் மார்க்கண்டு (பிரபா)

பிறப்பு28 MAY 1971, இறப்பு22 AUG 2020

கீதா மளிகை உரிமையாளர்- பிரான்ஸ்

வயது 49

புங்குடுதீவு இறுப்பிட்டி, Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Scarborough, Canada

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிரபாகரன் மார்க்கண்டு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!! 

ஆவாரம் பூப்போல அழகான சிரிப்பழகை
தேவாரப் பாடல் போல் இனிப்பான பேச்சழகை
ஆதாரமாய் அனைவருக்கும் அச்சாணியென இருந்த உறவே
விண்ணுலகம் விரைந்து மூன்றாண்டு போனதுவோ?

அன்பிற்கு பணிவாய் பண்புக்கு பொருளாய்
நட்பிற்கு இலக்கணமாய் திகழ்ந்தாயே!
கண்ணுக்கு கண்ணாய் இருந்த நீரோ
காற்றில் கரைத்து கனவாகி போனதேன்…? 

உதிரத்திலும் உயிரிலும் கலந்த – உன்
உடன்பிறப்புக்களை தவிக்க விட்டதேனோ?
எம் வாழ்வில் ஒளி தந்த நீங்கள் – நொடிப்பொழுதில்
வானவில்லாய் மறைந்ததேனோ…?

நிலையில்லாத இவ்வுலகில் நிஜமாக வாழ்ந்த வாழ்வு
இன்று கானல் நீரானதேனோ…?
வவாழ்க்கை என்னும் பயணத்தை பாதி வழி கடந்து
செல்வதற்குள் காலக்கொடியவன் கண்வைத்து உன்னுயிரை
வேளை வருமுன் பறித்து வருடமோ மூன்றாகிவிட்டது

அதன் வலியோ எமக்கு ஆயுள்வரை தொடர்கிறது …..

தனது ஆருயிர் விடுமுன்பு தன்நலம் கருதாது உயரிய சேவையாகிய உடல் உறுப்புகளை வழங்கி அவர்கள் மிக்க நலமுடன் வாழ்கின்றனர் என உணர்ந்து இப்பூவுலகு விட்டு புகழ் உடல் பெற்று பொன் உலகு ஏகினார்.

என்றும் உங்கள் நினைவுடன் வாழும் அண்ணமார், அண்ணிமார், தம்பி, பெறாமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்…

தகவல்: தசி – சகோதரன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles