Sangathy
News

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்

Colombo (News 1st) கராப்பிட்டிய  போதனா  வைத்தியசாலையில் சிறுவர் இருதய  சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருதய பிரிவின் விசேட வைத்திய நிபுணர்  தொழிலுக்காக வௌிநாடு சென்றமையால் இந்த நிலை தோன்றியுள்ளது.

இதன் காரணமாக சிறுவர்களுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகக் குழு தெரிவித்தது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுவர் இருதய  அறுவை சிகிச்சையை அவர் மாத்திரமே மேற்கொண்டதாகவும்  அவருடைய வெற்றிடத்தினை பூர்த்தி செய்வது அவ்வளவு இலகுவாகாது எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் மருத்துவர் தினேஷ் யாப்பா தெரிவித்தார்.

Related posts

ஜோர்தானில் மூடப்பட்ட ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றிய 220 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்

John David

Australian virus resurgence forces suspension of parliament

Lincoln

Bacterial infection claims two lives in Galle Prison

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy