Sangathy
News

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு பதிவு

Colombo (News 1st) இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட  இலங்கை கடல் கொள்ளையர்கள் 46 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அண்மையில் இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆர்காட்டுத்துறையில் இருந்து தென்கிழக்கில் 22 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடல் கொள்ளையர்கள்  தாக்கியதாக சன் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 5 இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை சேதமடைந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Related posts

பொரளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Lincoln

As crisis worsens, tots drop out of preschools

Lincoln

TUs not attempting to sabotage A/L answer script evaluation: Unionist

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy