நெற்கொள்வனவிற்காக மேலும் 250 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது

Colombo (News 1st) நெற்கொள்வனவிற்காக மேலும் 250 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக நெற்கொள்வனவு சபை தெரிவித்துள்ளது.

11 மாவட்டங்களில் தற்போது நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெற்கொள்வனவு சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.

இதற்காக 39 களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நெற்கொள்வனவை ஆரம்பிப்பதற்காக இதற்கு முன்னர் 250 மில்லியன் ரூபா வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த தொகை மூலமான கொள்வனவு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த நிதியினூடாக 27 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக நெற்கொள்வனவு சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட மேலும் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles