சந்திரயான்-3: இந்தியாவின் சாதனைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து

Colombo (News 1st) சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியா பெற்றுள்ள இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தொடர்பில் அண்டை சகோதர நாடாக இலங்கையும் பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் சாதனை தொடர்பில் இன்று பாராளுமன்றத்திலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles