காலி சிறைச்சாலை கைதிகளை பார்வையிட மீண்டும் சந்தர்ப்பம்

Colombo (News 1st) காலி சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதிகளிடையே காய்ச்சல் மற்றும் தோல் தொடர்பான தொற்று பரவியமையினால் கடந்த நாட்களில் கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

எவ்வாறாயினும், கைதிகளை வௌியில் அழைத்துச் செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் தவிர்க்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

காலி சிறைச்சாலையில் கைதிகளிடையே காய்ச்சல் மற்றும் தோல் தொடர்பான தொற்று பரவியமையினால் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 09 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நோய் தொற்று தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles