இலங்கை பிரதமர் – பங்களாதேஷ் சபாநாயகர் இடையே சந்திப்பு

Colombo (News 1st) பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி(Shirin Sharmin Chaudhury) ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இருநாட்டு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில், புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.

இவ்வாறான ஒத்துழைப்பின் மூலம் இருநாடுகளினதும் ஜனநாயக பாராளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்த முடியும் என பங்களாதேஷ் சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மருந்து உற்பத்தியில் பங்களாதேஷிடம் காணப்படும் விசேட நிபுணத்துவத்தை இலங்கையின் மருந்து உற்பத்திக்காக பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக இந்த சந்திப்பின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles