Sangathy
News

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பம்

Colombo (News 1st) துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்கை ஒக்டோபர் முதலாம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் 2024 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்கும் நடவடிக்ைக முன்னெடுக்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, 2024 / 2025 வருடங்களுக்கான தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவுகளைப் புதுப்பிக்கும் நடவடிக்கையும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த தினத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பிப்பு நடவடிக்கைகளுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படும் அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

Colombo (News 1st) சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் சுகாதார அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க தயாரான போது, பொலிஸாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் வேறொரு இடத்திலிருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க சிவில் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

Lincoln

Turkish journalists detained over earthquake reports

Lincoln

AV Productions marks 30th anniversary, presents the way forward with ‘NextGen Strategy’

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy