Sangathy
News

ஊழல் மோசடியில் ஈடுபடும் அரச அதிகாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது

Colombo (News 1st) கணக்காய்வு சட்டத்தின் புதிய விதிகளின் படி, ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரச அதிகாரிகளிடம் இருந்து கூடுதலான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துதல், தற்போதுள்ள சட்டத்தை மீறி அதனை செய்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து அத்தகைய கட்டணத்தை அறவிடவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக தலைமை கணக்கு அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கும் திறன் கணக்காய்வு ஆணையகத்திற்கு உள்ளது

அதன்படி, கூடுதல் கட்டணத்தை வசூலிக்க வேண்டிய பல அரச அதிகாரிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இருப்பினும், கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அவர்களால் மேன்முறையீடு செய்ய முடியும். அதற்கு மேல்முறையீட்டுக் குழுவை அமைக்க வேண்டும். எனினும், அந்த குழுவிற்கான உறுப்பினர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இதனால் குழு அமைக்கப்படும் வரை கூடுதல் கட்டண உத்தரவுகளை அமுல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேசிய  கணக்காய்வு ஆணையகம் தெரிவித்துள்ளது.

Related posts

“A friend in need is a friend indeed”: Sri Lanka’s praise for India

Lincoln

Udaya demands halt to prayers at ‘Miracle Dome’, arrest of ‘Pastor Jerome’

Lincoln

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy