இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். 

இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையிலான கடற்பரப்பில் 03 படகுகளுடன் குறித்த 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள், தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles