Sangathy
News

சுஜித் பண்டார யட்டவர ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

Colombo (News 1st) இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சுஜித் பண்டார யட்டவர,  ஹமாஸ் அமைப்பினரால் பணயக்கைதியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்களால் சுஜித் பண்டார யட்டவர, கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.

அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவரை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார  தெரிவித்தார்.

வென்னப்புவவை சேர்ந்த சுஜித் பண்டார யட்டவர இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
 

Related posts

India says BBC film on Modi’s role in Gujarat riots ‘propaganda’

Lincoln

இலங்கையர்கள் சிலர் ஜோர்தானில் பலவந்தமாக தொழில் புரிய நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக தகவல்

John David

சாரதிகள், நடத்துநர் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy