சமையல் எரிவாயு விலை உயர்ந்தாலும் பேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாது

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்கப்படமாட்டாதென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த துறையை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவிக்கிறார்.

பேக்கரி உணவுகளின் விற்பனை 25 வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதேவேளை, இன்று முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 95 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 03 ஆயிரத்து 565 ரூபாவாகும்.

அத்துடன், 05 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை ஆயிரத்து 431 ரூபாவாகும்.

2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலையானது 650 ரூபாவில் இருந்து 668 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles