Sangathy
News

புதிதாக 2,519 தாதியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளன

Colombo (News 1st) இன்று (17) புதிதாக 2,519 தாதியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டு, 2020 ஆம் ஆண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டார். 

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், அலரி மாளிகையில் இந்த நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.

நியமனம் பெறுபவர்கள், நாடளாவிய ரீதியில் தாதியர் வெற்றிடங்கள் உள்ள வைத்தியசாலைகளுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இதேவேளை, இடமாற்றம் கோரி விண்ணப்பித்த தாதியர்களுக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

000 தாதியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம்

Lincoln

அகதிகள் முகாம் மீது வான்வழித் தாக்குதல்; காஸாவில் பதற்றம்!

Lincoln

Russia refuses to give Pakistan 30-40pc discount on crude oil

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy