மகாவலி ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

Colombo (News 1st) நாவலப்பிட்டி – பல்லேகம பகுதியில் மகாவலி ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று(27) மீட்கப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றில் சடலமொன்று காணப்படுவதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் 3 நாட்களாக ஆற்றில் மிதந்துள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles