Sangathy
IndiaNews

மிக்ஜம் புயலை தேசியபேரிடராக அறிவிக்க வேண்டும் – டி.ஆர்.பாலு

மிக்ஜம் புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் குளிர்கால கூட்டத்தொடரில் இன்று (06) பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவகாரத்தை எழுப்பிய டி.ஆர்.பாலு மேலும் தெரிவிக்கையில், “1.2 கோடிக்கும் அதிகமான தமிழக மக்கள் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் புயலால் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. படகுகளில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நிவாரணைப் பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

மத்திய அரசு இந்நேரத்திற்கு மிக்ஜம் புயலை தேசிய பேரிடராக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் செய்யவில்லை. எனவே மத்திய அரசு அவர்களது குழுவை விரைந்து அனுப்பி, தமிழகத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டு இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று மிக்ஜம் புயல் தமிழகப் பகுதிகளில் கரையைக் கடந்தது. தற்போது ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கு மிக்ஜம் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்

Lincoln

Air quality monitoring agreement inked between SL and France

Lincoln

சபாநாயகர் 4 சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சான்றுப்படுத்தியுள்ளார்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy