Sangathy
NewsSrilanka

புலிகள் பற்றி பேச சாணக்கியனுக்கு உரிமையில்லை – சாமர சம்பத்

விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி பேசுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு எந்த உரிமையும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (07) இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செலவுத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன் எம்.பி., தம்மை புலி என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இதனைக் சுட்டிக்காட்டி உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், சபையில் பேசிய சாணக்கியன் “நான் ஏதாவது கூறினால் என்னை புலி என்று கூறுவீர்கள்” என்று குறிப்பிட்டார். அவருக்கும் புலிகளுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது.

மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக இருந்தபோது அவரிடம் போய் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக பதவி பெற்றார். ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டார்.

அது மட்டுமல்ல, இவர் கண்டியில் உள்ள சிங்கள பாடசாலையில் தான் கல்வி கற்றார். சிங்கள வீடுகளில்தான் உணவருந்தினார். சிங்களப் பெண்கள்தான் அவரின் தோழிகள். அவர் ஒரு சிங்களப் பெண்ணைத்தான் திருமணமும் செய்யவுள்ளார்.

எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒன்பது உறுப்பினர்களுக்கு மட்டுமே புலிகள் பற்றி பேச உரிமையுண்டு. ஏனெனில், அவர்கள் புலிகளுடன் இருந்தவர்கள், வாழ்ந்தார்கள். ஆனால், சாணக்கியனுக்கு தன்னை புலி என்று கூற எந்த தகுதியும் உரிமையும் கிடையாது – என்றார்.

Related posts

க.பொ.த உயர் தர, சாதாரண தர பரீட்சைகளுக்கான தரங்களை மாற்ற அரசாங்கம் திட்டம்

Lincoln

Build SL 2024 to feature ‘China Trade Pavilion’

John David

More than a million Lankans have left the country in past 20 months

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy