Sangathy
News

ஐ.நா வதிவிட பிரதிநிதி Marc-André Franche உடன் ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்

Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி Marc-André Franche-இற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று (07) சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சமகால விடயங்கள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதிக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதன்போது விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், மலையகத்திற்கான வீட்டுத் திட்டம், மலையக சமூக மேம்பாடு என்பன தொடர்பிலும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், மலையகக் கல்வி மேம்பாடு குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பெண்களுக்கான உரிமைகள், பெண்களின் சுகாதார பாதுகாப்பு, சிறார் மற்றும் மகளிருக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான ஏற்பாடுகள், சிறுவர் தொழிலாளிகள் உருவாக்கப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சுத்தமான குடிநீர் இலக்கை அடைவதற்காக அமைச்சு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தேவையான உதவித் திட்டங்கள் குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஐ.நா பிரதிநிதியிடம் விளக்கமளித்துள்ளார். 

பொது தனியார் கூட்டாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஸ்மார்ட் தொழில்நுட்பம் என்பவற்றை நீர் வழங்கல் துறையில் பயன்படுத்தி, அதனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts

NPP/JVP popularity surge in Feb. Opinion Tracker

Lincoln

Canada pulls 41 diplomats from India amid row over separatist’s killing

John David

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சில தினங்களில் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy