Sunday, February 8, 2026
Homeலிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முதல் வட் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை கணிசமாக உயர்வடையும் என்று நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிக்கப்படுவதால் நாங்கள் விரும்பவிட்டாலும் எரிவாயுவின் விலை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

இதற்கமைவாக தற்போது 3,565 ரூபாவாக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டருக்கு 18 சதவீத வட் வரி சேர்க்கப்பட்டால் 640 ரூபாவினால் எரிவாயு சிலிணடரின் விலை உயர்த்தப்படலாம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular