Sangathy
News

மியன்மாரின் சைபர் குற்றப்பிரதேசத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது குறித்த பேச்சுவார்த்தை ஆரம்பம்

Colombo (News 1st) மியன்மாரில் பயங்கரவாதிகளிடம் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பது தொடர்பில் குறித்த பயங்கரவாத குழுவுடனான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் உள்துறை அமைச்சரின் இணக்கப்பாட்டை தொடர்ந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்துள்ளார்.

மியன்மாரின் தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள ‘Cyber Criminal Area’ எனப்படுகின்ற சைபர் குற்றப் பிரதேசம் என அடையாளப்படுத்தப்படுகின்ற இடத்தில் இலங்கையின் 56 இளைஞர், யுவதிகள் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கடந்த சில தினங்களாக நாம் தகவல்களை வௌியிட்டோம்.

மியாவெட்டி நகரத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பிரதேசம் முழுமையாக பயங்கரவாத குழுவொன்றின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்காக இலங்கை தூதரகம் கடும் பிரயத்தனம் மேற்கொள்ள நேரிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் கூறினார்.

Related posts

பொது அரங்கக்கலை வகைப்படுத்தல் சட்டமூலம் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு

John David

சில நாடுகளுடன் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கைகளில் கைச்சாத்திட திட்டம்

John David

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy