16 தொலைபேசிகள், பணம், போதைப்பொருளுடன் யாழில் மடக்கிப்பிடிக்கப்பட்ட பெண்!

யாழ்ப்பாணம் – துன்னாலை குடவத்தை பகுதியில் பெருந்தொகையான போதைப் பொருட்களுடன் 43 வயதான பெண்ணொருவர் நேற்றைய தினம் (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 620 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 678,900 ரூபா பணமும் 16 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பெண்ணை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles