Tuesday, February 10, 2026
spot_img
Homeயாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் உட்பட மூவருக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் உட்பட மூவருக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு

யாழில் போதைப்பொருளுடன் கைதான பெண் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு இளைஞனை பொலிஸார் , பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சித்தங்கேணி பகுதியில் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து அவரை 27ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை நவாலி பகுதியில் 2கிராம் 824 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பெண்ணையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் உடுவில் பகுதியில் 2 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை சுன்னாகம் பொலிஸார் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular