மூளைக்காய்ச்சல் ஆபத்துள்ள சிறைச்சாலைகளுக்கு நோயெதிர்ப்பு மருந்து

மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை நாடளாவிய ரீதியில் மூளைக்காய்ச்சல் தொடர்பான ஆபத்தில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் சிறைச்சாலைகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டம் இந்த வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என சிறைச்சாலைகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 

தற்போது மாத்தறை சிறைச்சாலைக்கு கைதிகளை அனுப்பும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு புதிய கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகின்றனர்.

மாத்தறை சிறைச்சாலையின் கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த நோயெதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் அதிகளவில் இந்த பாதிப்பை எதிர்நோக்குவதாக அவர் கூறினார். 

மாத்தறை சிறைச்சாலையிலுள்ள நோய்வாய்ப்பட்ட கைதிகள் பலரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் ஒரு மாதிரியில் மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles