Tuesday, February 10, 2026
spot_img
Homeகாணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு

காணாமல் போயிருந்தவர் சடலமாக மீட்பு

Colombo (News 1st) மன்னார் – செல்வேரி பகுதியில் காணாமல் போயிருந்த 43 வயதான நபரொருவர் இன்று(28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வேரி கிராமத்தை சேர்ந்த குறித்த நபர், கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஏற்கனவே வலிப்பு நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular