Sangathy
News

வற் வரி இன்றுமுதல் அமுல் – விலை அதிகரிக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரங்கள்!

வற் வரியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் கடந்த மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் குறித்த வரி திருத்தம் இன்று (01) முதல் அமுலாகின்றது.

அதன்படி, இதுவரை 15% ஆக இருந்த வற் வரி இன்று முதல் 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை வரி விதிக்கப்படாத 97 பொருட்கள் மற்றும் சேவைகளுக்கும் வற் வரி அமுலாகியுள்ளது.

உள்நாட்டு எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதும் குறித்த வரி அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து கையடக்க தொலைபேசிகள், மருத்துவ தொழில்நுட்ப உபகரணங்கள், மருந்து உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கும் வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இயந்திரங்களும் சோலர் பனல்கள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகளுக்கும் வற் வரி விதிக்கப்படுகிறது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி, நகைகள், மென்பொருள், கொப்பரா, ரப்பர், முட்டை, தேயிலை, தேங்காய் எண்ணெய் மற்றும் திரவ பால் ஆகியவையும் வட் வரியை அதிகரிக்கும் பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், காலணி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் முடிக்கப்பட்ட தோல் மீதும் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கலை விற்பனையின் போதும் வற் வரி அறவிடப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதில் வழங்கப்படும் சேவைகளுக்கு, பயண முகவர் நிறுவனங்களால் வழங்கப்படும் தொடர்புடைய சேவைகளுக்கு வற்; வரி வசூலிக்கப்படுகிறது.

திரைப்பட விநியோகம், கண்காட்சி மற்றும் தயாரிப்பின் போது ஆய்வக வசதிகள் மீதும் வற் வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் தானியங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி அதிபோசனை உணவுகள் மற்றும் தேசிய தேங்காய் எண்ணெய்க்கும் வற்; வரி விதிக்கப்படவுள்ளது.

இதேநேரம் வற் வரிக்கு உட்படாத பல பொருட்கள் மற்றும் சேவைகளையும் அரசாங்கம் அறிவித்தது. அதன்படி சிறப்பு வணிக வரிக்கு உட்பட்ட பொருட்களுகள் வற்; வரி இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வற் வரி அதிகரிப்பால் சில பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை அதிகரிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வற் வரி திருத்தம் காரணமாக இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கான இரண்டாவது கிலோமீட்டருக்கான 80 ரூபாய் கட்டணம் 100 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிற்துறையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், கையடக்கத் தொலைபேசிகளின் இறக்குமதிக்கு வற் வரி அறவிடப்படுவதால், கையடக்கத் தொலைபேசிகளின் விலைகளும் அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வற் வரி திருத்தத்துடன் இன்று முதல் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வற் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என மதுபான உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மது வரி மற்றும் வற் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய், மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

செங்கடலில் தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து தாக்குவோம்: ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

John David

Fuel queues partially due to Minister’s big mouth: Official

Lincoln

Trump administration reverses course on order barring some foreign students

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy