எரிவாயு விலைகள் அதிகரிப்பு

    0
    49

    Colombo (News 1st) லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதற்கமைய,

    12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 685 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. (புதிய விலை 4,250 ரூபா)

    5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 276 ரூபாவால் உயர்வடையவுள்ளது. (புதிய விலை 1,770 ரூபா)

    2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 127 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. (புதிய விலை 795 ரூபா)

    இதனிடையே, லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிணங்க 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here