யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்றைய தினம் (01) பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 50,000 ரூபாய் பணம் மற்றும் போதைப் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இருவரில் ஒருவர் யாழில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles