மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி இன்று (03) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் உடுப்பிட்டி பகுதியில் கடையடைப்பு போராட்டமும் இடம்பெற்றது.

போராட்டத்தின் இறுதியில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்று ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அதன் பிரதிகள் பல்வேறு தரப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles