Sangathy
News

க.பொ.த உயர்தர பரீட்சை இன்று(04) ஆரம்பம்

Colombo (News 1st) 2023 ஆம் ஆணடுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(04) ஆரம்பமாகின்றது. 

இம்முறை பரீட்சையில் 346,976 பேர் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 281,445 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.

உயர்தர பரீட்சையை முன்னிட்டு, நாடு முழுவதும் 2298 பரீட்சை மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக 
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆரம்பமாகவுள்ள பரீட்சை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மழையுடன் கூடிய வானிலையால் பரீட்சைக்கு இடையூறு ஏற்படாத வகையில் பரீட்சையை நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளன.

அதற்கமைய வெலிகந்த, அரலகங்வில மற்றும் திம்புலாகல கல்வி வலயங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகளுக்காக மனம்பிட்டிய சிங்கள மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Govt may consider hangwomen if execution starts: State Minister

John David

மிகப்பெரிய கலையரங்கிற்கு கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவர் அமரர். R . ராஜமகேந்திரன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது

Lincoln

வரிப்பணத்தில் எப்படி இவர்களால் உல்லாசமாக இருக்க முடிகிறது? – மஹிந்த தரப்புக்கு சஜித் சாட்டை!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy