உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் – சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்த போது சாத்தியப்படாது என்ற தீர்மானித்ததற்கு அமைய ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது என கலந்துரையாடப்பட்டுள்அவர் தெரிவித்தார்.

அத்தோடு நான் கட்சி தலைவராக தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும், தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருவரை தெரிவுசெய்யும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரா. சம்பந்தன் தலைமையில் கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles