Sangathy
News

உயர் தர பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் வௌியான விவகாரம்: ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல்

Colombo (News 1st) இந்த ஆண்டுக்கான உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள், பரீட்சைக்கு முன்னதாக வெளியானமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அம்பாறையிலுள்ள பாடசாலையொன்றின் விவசாய விஞ்ஞான ஆசிரியரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின்  இரண்டாம் பகுதி வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பரீட்சைக்கு முன்னதாக விவசாய விஞ்ஞான பாடத்தின்  இரண்டாம் பகுதிக்கான கேள்விகள் மற்றுமொரு தாளில் கையால் எழுதப்பட்டு சமூக ஊடகங்களில் வௌியானமை தெரியவந்தது.

இதனை தொடர்ந்தே குறித்த வினாத்தாள், மும்மொழிகளிலும் கல்வி அமைச்சினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இரத்து செய்யப்பட்டுள்ள விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் பகுதி வினாக்களுக்கான மீள்பரீட்சை விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீள் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

JVP plans protest in Colombo tomorrow

Lincoln

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு

Lincoln

Sri Lanka Cricket appoints Olympic medalist Susanthika Jayasinghe to promote women’s cricket

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy