Sangathy
News

அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்

Colombo (News 1st) ஹூதி கிளர்ச்சியாளர்கள் யேமன் கடற்கரையில் அமெரிக்காவிற்கு சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Gibraltar Eagle என்ற குறித்த கப்பலில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க இராணுவக் கட்டளையின் படி, குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

ஏடன் வளைகுடாவில் கப்பல் தனது பயணத்தை தொடர்கிறது.

ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தாக்கப்பட்ட கப்பல் உருக்கு இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும் அது தாக்கப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் சுமார் 160 கிலோமீட்டர் வரை சென்றிருந்ததாகவும் Eagle Bulk Shipping கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

Hypocrisy of the European Union

John David

California shuts down again as US coronavirus crisis expands

Lincoln

JVP: 300 doctors who completed internship have not accepted appointments

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy