அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் கைது

Colombo (News 1st) அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் அந்தவத்த காம்கானம்கே சுகத் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்தல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் கடமையாற்றிய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது, சந்தேகநபர் குறித்த அதிகாரிக்கு அழுத்தம் விடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அக்மீமன பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர், யுக்திய சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles