Sangathy
News

தேஷபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியானவர் அல்ல: உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Colombo (News 1st) பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமிக்க வேண்டாமென வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் இன்று (18) அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை சித்திரவதை செய்தமை தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அடிப்படை உரிமைகளை மீறிய நபராக தேஷபந்து தென்னகோன் பெயரிடப்பட்டுள்ளமை, போராட்டக்களம் மீதான தாக்குதலில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக, அவர் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தகுதியானவர் அல்லவென ஐக்கிய மக்கள் சக்தியினர், தமது அடிப்படை உரிமை மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

Related posts

நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிக்க முடியாது: மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு

Lincoln

இன்றும் கன மழை – வானிலை எதிர்வுகூறல்

John David

Police attack on NPP protest: HRC orders IGP to submit report

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy