Sangathy
EuropeInternationalLatestNews

இத்தாலி சிறையில் இருந்து தப்பிய மாபியா தலைவன் பிரான்சில் கைது..!

இத்தாலியில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், போதை மருந்து வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் பல “மாபியா” கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.

இத்தாலியின் போகியா (Foggia) எனும் நகரில் செயல்பட்டு வந்த “கார்கனோ குழு” (Gargano clan) எனப்படும் இத்தகைய ஒரு கும்பலின் தலைவன், மார்கோ ராடுவோனோ (40).

30 வருட நீண்டகால தேடலுக்கு பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்ட மார்கோவிற்கு, நீதிமன்றத்தால் 24-வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. மார்கோ மீது போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து இத்தாலியின் தீவு பிரதேசமான சார்டினியாவின் நுவோரோ பகுதியில் உள்ள கடுமையான காவல் கட்டுப்பாடுகள் நிறைந்த சிறையில் மார்கோ அடைக்கப்பட்டான்.

கடந்த 2023 பிப்ரவரி மாதம், மார்கோ, சார்டினியாவின் சிறை அறையில் இருந்து வெளியே வந்து, பல போர்வைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து, சிறைச்சாலையின் மதில் சுவரையும் தாண்டி, கீழே குதித்து தப்பிச் சென்றான்.

ஐரோப்பிய நாடுகளின் குற்றவாளிகளின் தேடல் பட்டியலில் உள்ள முக்கிய குற்றவாளியான மார்கோ தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஐரோப்பிய ஒன்றிய காவல்துறை மார்கோவை தேடி வந்தது.

ஐரோப்பிய நாடுகளில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில், மார்கோ, பிரான்ஸ் நாட்டின் அலெரியா பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு பெண்ணுடன் உணவருந்தி கொண்டிருந்த போது பிரான்ஸ் காவல்துறையினர் அவனை கைது செய்தனர்.

போலியான பெயர் மற்றும் போலி பதிவு எண் கொண்ட வாகனத்துடன் அப்பகுதியிலேயே அவன் வசித்து வந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.

மார்கோ சிறையிலிருந்து தப்பி சென்றது இத்தாலி அரசுக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது.

இந்நிலையில், அவன் மீண்டும் பிடிபட்டதால், தங்கள் நாட்டிற்கு அவனை அழைத்து செல்லும் முயற்சியில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.

Related posts

US military asks for public’s help to find F-35 fighter jet

Lincoln

Canadian fashion mogul Peter Nygard guilty of four counts of sexual assault

John David

வத்தளை – லன்சியாவத்தை முகத்துவாரம் அருகில் ஆண் குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy