Monday, September 23, 2024
Homeஒரேயொரு டெஸ்ட்: ஆப்கானிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை..!

ஒரேயொரு டெஸ்ட்: ஆப்கானிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை..!

இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பில் நடைபெற்றது. கடந்த 2-ஆம் திகதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 198 ரன்னில் சுருண்டது. இலங்கை அணியின் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அசிதா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மேத்யூஸ் (141), தினேஷ் சண்டிமல் (107) ஆகியோரின் சதங்களால் 439 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.

241 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் இம்ராஹிம் ஜட்ரன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 114 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆப்கானிஸ்தான் ஒரு கட்டத்தில் 241 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.

சதம் அடித்த மேத்யூஸ், சண்டிமல்

அதன்பின் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க 296 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் 55 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றது. பிரபாத் ஜெயசூர்யா 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் 56 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரபாத் ஜெயசூர்யா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

முதல் நாள் (பிப்ரவரி 2-ஆம் திகதி): ஆப்கானிஸ்தான் 198 ரன்னில் ஆல்அவுட். இலங்கை 80/0

2-வது நாள் (பிப்ரவரி 3-ஆம் திகதி): இலங்கை 410/6

3-வது நாள் (பிப்ரவரி 4-ஆம் திகதி): இலங்கை முதல் இன்னிங்சில் 439 ஆல்அவுட். ஆப்கானிஸ்தான் 199/1

4-வது நாள் (பிப்ரவரி 5-ஆம் திகதி): ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சில் 296 ரன்னில் ஆல்அவுட். இலங்கை 50/0 (வெற்றி)

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments