வௌ்ளவத்தையில் துப்பாக்கிப் பிரயோகம்

Colombo (News 1st) வௌ்ளவத்தையில் ஹோட்டலொன்றுக்கு அருகில் இன்று(27) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய ஹோட்டல் அமைவிடத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

T56 ரக துப்பாக்கியே இதன்போது பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles