தலைமன்னாரில் சிறுமி கொலை: ஐவரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன

Colombo (News 1st) தலைமன்னார் – ஊர்மனை கிராமத்தில் 10 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி K.L.M. சாஜித் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிறுமியின் உறவினர்கள் மற்றும் சிறுமியின் சடலத்தை முதலில் கண்டவர் உள்ளிட்ட ஐவரின்  சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த வழக்கில் சிறுமி சார்பாக மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் அனைவரும் ஆஜராகி இருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த மாதம் 15 ஆம் திகதி மாலை காணாமற்போன 10  வயதான சிறுமியின் சடலம், சிறுமி தங்கியிருந்த அம்மம்மாவின் வீட்டில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள  தென்னந்தோப்பிலிருந்து கடந்த 16 ஆம் திகதி காலை கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதியானது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles